Stories

பேராசிரியர் க. நெடுஞ்செழியன்


 

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் விடயத்தில் இயற்கையும் வாழ்வும் இன்னும் கூடுதல் கருணையுடன் நடந்திருக்கலாம்!

 

சீனிவாசனை அழைத்து, ‘நான் அந்திமழை’, இதழுக்கு நேர்காணல் கொடுக்கவேண்டும் என்று கூறினார். நாங்கள் அந்திமழை அசோகனை அழைத்துச் சொன்னதும் , மறுநாளே எங்களுக்கு முன்பாகவே சென்று, பேராசிரியரை நேர்காணல் எடுக்கத் தொடங்கியிருந்தார், அசோகன். அந்திமழையில் தான் அவருடைய முந்தைய நேர்காணலும் சிறப்பாக வந்திருந்ததை...

Continue Reading...

மழை வருவதற்கு ஏன் தாமதமாயிற்று


 

 

 

ஓவியம்: Chiang Yee Chinese in Britain

 

நேற்றிலிருந்து மழையை எதிர்நோக்கியிருக்கிறேன். கூகிளையும் சிரியையும் எத்தனையோ முறை கேட்டு உறுதி செய்தும் இன்று மாலை தான் மழை எட்டிப்பார்த்திருக்கிறது. நேற்று நடுநிசியில் விழிப்பு தட்டிய போது கூட கூர்ந்து கேட்டும் மழை ஓசை இல்லாதது என்னவோ போலிருந்தது. காலையிலேயே பணிக்குச் சென்று அதிதீவிர மனநிலையை எட்டியபோது உடன் பணி செய்யத்தொடங்கியிருந்த பெண்ணிற்கு உடல்நலமில்லாமல் போக அவர் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்....

Continue Reading...

காதலும் காமமும்


 

 

 

ஓவியம்: வான்கோ

*

“இந்த டிரெஸ் எப்படி இருக்குது மேம்?”

“அருமையா இருக்கு. தீபாவளிக்கு எடுத்ததா?”

“ஆமா. இங்க ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சாங்க. அவள கூட்டிக்கிட்டு போய் மேக்ஸ்ல எடுத்தேன்”

“பூனை மாதிரி இருக்கீங்க”. புன்னகைத்தாள். அவளுக்குப் பூனைகள் பிடிக்கும்.

வெள்ளையில் கருப்பு வளையங்களாய்க் கோடுகள் போட்ட உடை....

Continue Reading...

ஓடும் ரயில் முன் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண்கள்


 

எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே திருச்சியில் வாழும் என் அம்மாவுடன் சென்று இருந்து வருவேன். அதுவும், குடும்ப சம்பந்தப்பட்ட பணிகள் வற்புறுத்தும்போது மட்டுமே செல்வேன்.  அம்மாவிற்கு வீட்டில் முழு நாளும் வானொலி ஒலிக்கவேண்டும். இன்னோர் ஆள் உடன் இருப்பது போல் தோன்றும் என்பார். மாலை ஆறு மணியிலிருந்து பத்துமணி வரை டிவி தொடர்கள். ஆகவே, அமைதியான சூழல் வேண்டும் என் பணிகளை என்னால் செய்யமுடியாது. டிவியில் நீயா நானா, தமிழா தமிழா...

Continue Reading...

முன்பெல்லாம்......இப்பொழுதெல்லாம்......


 

முன்பெல்லாம் ஒருவர் மனதில் எப்படி இடம்பிடிப்பது என்னெவெல்லாம் செய்யவேண்டும் என்பது  தான்  ஒருவரின் நோக்கமாக இருந்தது. அதற்காக எதுவும் செய்வோம். வாழ்த்து அட்டை கொடுப்போம். நேரில் சென்று பார்ப்போம். நோதல் கரையக் காத்திருப்போம். நோவைத் தாங்கிக்கொண்டு கடந்து செல்வோம். நான் நிறைய கடிதம் எழுதியிருக்கிறேன். சொற்களால் கரைக்கமுடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை இருந்தது. ஏதோ சாக்குபோக்கு சொல்லியேனும் பிறருக்கு நம்மால்...

Continue Reading...

முதுமையின் முதுகெலும்பு


 

புகைப்படம்: John Coplans

 

அனுபவங்களை எழுதும்போது கவனமாக எழுதவேண்டியிருக்கிறது. அது எப்பொழுதும் இன்னொரு நபருடன் தொடர்புடையதாகவும் இருப்பதால், தான், தன்னுடையது என்று எந்த நல் அனுபவமும் கெடு அனுபவமும் நிறைவுறுவதில்லை. கடந்த சில நாட்களாக, தற்செயலாகவே வயதில் முதிர்ந்த நபர்களைச் சந்திக்கவேண்டியதாய் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் தங்கள் முன்பகுதி வாழ்வில் மிகவும் தீவிரமாகக் களமாடியவர்கள். தங்கள் தங்கள் துறைகளில் புதுமையைக் கொண்டுவந்தவர்கள், நீதீயை விதைத்தவர்கள்....

Continue Reading...

ஆழம், உண்மை, அர்த்தம்!


 

ஒரு முறை ஆழமான இடத்தில் கால் வைத்துப் பார்த்துவிட்டால், மேலோட்டமான இடங்களில் நீந்த ஆசையிருக்காது. அல்லது,

இங்கே ஆழம் இல்லை என்பது கால் வைத்த மாத்திரத்திலேயே புரிந்துவிடும் திறன் வந்துவிடும். மனம் என்பது ஒன்றை அறிந்துவிட்டால் அப்படித்தான், அறியாத நிலைக்குத் தன்னை மீண்டும் கொண்டு செல்லமுடியாது. ஹெராக்ளிட்டஸ் சொல்வதையும் இதனுடன் இணைத்துக்கொள்ளலாம், எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை. 

Continue Reading...

இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இந்த முறை ஒரு பெண்ணியவாதிக்கு!


 

 

 

 

நோபல் அறிவிப்பு வந்ததும், ஆனி எர்னோவின் Happening நூலை ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். அவர் சொல்வது போலவே எழுத்தைக் கத்தி போல செயல்படுத்துகிறார். வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்கமுடியாது. எழுத்தை ஓர் அரசியல் செயல்பாடு என்று கூறும் இவர் தீவிர வாசிப்பே அவரை எழுத்திற்கு அழைத்துவந்ததாகவும் சொல்கிறார்.

 

சமகாலச் சூழலை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்று நோபல் கமிட்டி சொன்னாலும், ஒரு பெண்ணியவாதி...

Continue Reading...

மீண்டும் மீண்டும் மாமல்லபுரம்


 

 

பல முறை சொல்லியிருக்கிறேன், மாமல்லபுரம் தமிழ்நாட்டின் அவ்வளவு அழகான அதே சமயம் அவ்வளவு தொல்லியல் முக்கியத்துவம் மிகுந்த இடம் என்று. இருளர் பற்றிய களப்பணிகளின் போது தான் இருளர்களின் மிகவும் முக்கியமான பண்பாட்டு விழாவான மாசி மகம் திருவிழா பற்றிய அறிய நேர்ந்தது. ஆண்டுதோறு மாசி பெளர்ணமி அன்று மாமல்லபுரம் கடற்கரை கோயிலை ஒட்டி இருளர் எல்லோரும் ஒன்று கூடி கடல்கன்னியை வணங்கி வேண்டும் திருவிழா. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் அவர்கள்...

Continue Reading...

தூய்மை எனப்படுவது யாதெனின்


நண்பர் முனைவர் இல. அம்பலவாணன் அவர்களின் நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை:

 

நம் நாடு ஒவ்வொரு நாளும் தூய்மையாக இருப்பது யாரால். அன்றாடம் நம் தெருக்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு பணியிடங்கள், தனியார் பணியிடங்கள், கோயில்கள் என எல்லா இடங்களும் தூய்மையாக இருப்பது எங்ஙனம். சட்டென்று ஒரு காலை தூய்மையான காலையாக மலருவது எப்படி. இந்திய நாட்டிற்கு மட்டுமுள்ள விசித்திரமான...

Continue Reading...

என் ஈகோ


 

இன்று காலை எழுந்ததுமே  மனம் கொந்தளிப்பாக இருந்தது. மனதை ஆற்றுப்படுத்த அம்மாவை அழைத்துப் பேசினேன். அப்படியும் அமைதியாகவில்லை. விழுப்புரத்திலிருந்து சிஸ்டர் அழைத்திருந்தார். நீண்ட நேரம் பேசுபவர். வைரஸ் காய்ச்சல் போல இருக்கிறது என்றார். மருத்துவம் சொன்னேன். நேற்றுவரை உடன் இருந்தவர்கள் எல்லோரும் பூஜைக்கு ஊருக்குச் சென்றிருக்கின்றனர் என்றார். தனிமை வருத்துகிறது என்பதை உணரமுடிந்தது. ஃபோனை வைத்ததும் நண்பன் அழைத்தான். ...

Continue Reading...

வெள்ளை அரிசியில் சோறு


 

 

 

சோறு மிகவும் பிடித்தமான உணவு. காரணம் அதன் சுவையும் அது எதனுடனும் சேரும் பக்குவமும் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் நான் சிறுவயதாய் இருந்தபோது, நெல் வரவழைத்து அவித்து, காயவைத்து அதை அரைத்து வந்து பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. அந்த முழு நடவடிக்கையிலும் நான் மேற்பார்வை பார்ப்பேன். அவிக்கும் போது, மேலே கோணிப்பையை வைத்து மூடிவைப்பார். அம்மா தான் நெல் அவிந்திருக்கிறதா என்று பதம் பார்த்துச் சொல்வார்.  நெல்...

Continue Reading...

புரிசை நாடகவிழா 2022 விடிய விடிய


 

சவால்களில் எனக்குப் பெரிய சவால், இரவு முழுக்க விழித்திருப்பது தான். அதிலும் ஒழுங்கான உறக்கமின்மையால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று உள்ளுணர்வு அறிவுறுத்திக்கொண்டே இருக்கையில் முழு இரவு விழித்திருப்பதை ஒரு குற்ற உணர்வோடு தான் கழிப்பேன். இரண்டு மூன்று மணி வரை விழித்திருப்பது கொண்டாட்டமாக இருக்கும். அதற்கு மேல் சில நிமிடங்களுக்கு ஒரு முறை கைகடிகாரத்தைப் பார்க்கத் தோன்றிவிடும். இரண்டு இரவுகள், புரிசை கிராமத்தில் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் அவர்கள்...

Continue Reading...

"She Write" ஆவணப்படத் திரையிடல்


 

 

 

இருபது ஆண்டுகளுக்கு முன் அஞ்சலி மாண்டெய்ரோ மற்றும் ஜெய்சங்கர் இருவரும் சேர்ந்து இயக்கிய She Write ஆவணப்படத்திரையிடல், சமீபத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், எலெக்ட்ரானிக் மீடியா துறை வளாகத்தில் அதன் இணை பேராசிரியர் அருள்செல்வன் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ஆர்ஆர் சீனிவாசன்முன்னிலையில் திரையிடப்பட்டது.

 

மாணவர்கள் பார்த்திருந்து...

Continue Reading...

பாண்டிச்சேரி பயணக்குறிப்பு


 

இங்கே இருக்கும் பாண்டிச்சேரி தான். இந்த முறை செல்லும் போது வேறு நாட்டிற்குச் செல்வது போன்ற உணர்வே ஏற்பட்டது. நிறைய எழுத்து வேலைகள். குழந்தைகளுக்கான ஒரு நூல் வேலையை எடுத்துக்கொண்டிருந்தேன். அதை முடிப்பதற்குச் சில நாட்கள் தனிமை தேவைப்பட்டன. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சீனி,  ஆவணப்படப் பயிற்சிப்பட்டறை நடத்தினார்.  அவருக்கு  விருந்தினர் அறை தந்திருந்தனர். அறையின் பின்சுவர் ஒரு காட்டிற்குள் திறந்தது...

Continue Reading...

கழுதைகள் மீது புத்தகப்பொதிகள் போல


முற்போக்கான கல்வி என்பது வெறுமனே கருப்பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அன்று.

நடைமுறையில் அதைச் செயல்படுத்தும் விதமும் முக்கியமானது என்று கருதுகிறேன்.

அந்த வகையில், பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் புத்தகமூட்டையிலிருந்து விடுதலை வேண்டும்.

கனத்த புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உண்மையிலேயே மாணவர்களைக் கழுதைகளாக்குகின்றன.

இந்தக் காலத்திலும் அதாவது இணைய காலத்திலும், இப்படி புத்தகங்களைச்...

Continue Reading...

நீண்ட காத்திருப்பு - லேவ் தல்ஸ்தோய்


 

 

 

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தினமும் ஏதேனும் ஒரு சிறுகதையை வாசித்துவிடுவேன். சிறுகதை வாசிப்பது நொறுக்குத் தீனி உண்பது போல.

ஆங்கிலத்தில், மொழியாக்கத்தில், தமிழில் என ஏதோ ஒரு வகையில் வாசித்துவிடுகிறேன். ஆழமான சிறுகதை என்றால் நீண்ட நேரத்திற்கு அடுத்த நாள்

வரையிலும் கூட மனதின் அடியில் உழன்று கொண்டே இருக்கும். நம் அன்றாட வாழ்வின் உணர்வுகளிலிருந்து மாறுபட்ட புதிய உணர்வுகள்...

Continue Reading...

பெரியாரும் சித்த  நாத்திகமும்


 

 

தமிழர்கள் இந்த உலகத்திற்கு அளித்த கொடை என்றால் அது நாத்திகம் என்பேன். அது ஒரு கருத்தாக்கமாக, தத்துவமாக, சிந்தனையாக, கள எழுச்சியாக, இயக்கமாக ஆனது பெரியாரின்  தீவிர சமூகப்பணிகளுக்குப் பின்பு தான். என்றாலும் அதற்கு முன்பே தமிழர்களின் வாழ்வியல் நெறியாக நாத்திகமே இருந்திருக்கிறது. இதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்களை என் இடத்தில் இருந்து சொல்லமுடியும்.  ஒன்று, கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளின் இன்று வரை தொடரும்...

Continue Reading...

பார்த்துக்கொண்டிருத்தல்


 

 

 

வெவ்வேறு தியானநிலைகளைக் கற்றிருக்கிறேன். சிலவற்றைத் தொடர்ந்து பயின்று வருகிறேன்.  சிலவற்றை அவ்வப்பொழுது எடுத்துப் புத்தகம் புரட்டிப் பார்ப்பது போல் பயன்படுத்திப்பார்ப்பேன். என் பருவத்திற்கு ஏற்றாற் போல என் ஈர்ப்புகள் மாறி இருக்கின்றன. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலைமன்றத்தினுடன் இருந்த தீவிர ஈடுபாடு பிற்காலத்தில் ஏனோ குறைந்து போயிற்று. விபாசனா பெரிய அளவில் என்னைத் தன்னகப்படுத்திக் கொண்டது. சமீபத்தில்...

Continue Reading...

பெரியாரும் பிற ஆண்களும்


 
 
பெரியாருக்கும் பிற ஆண்களுக்கும் என்ன வேறுபாடு. இன்றும் பெரியாரைப் போல அல்லது பெரியாரை மறுத்துச் செயல்படும் சமூகத்தலைவர்கள், களப்பணியாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோருக்கும் என்ன வேறுபாடு. ஏன் பெரியார் இன்றும் சமூகத்தின் எதிரிகள், அவர் பெயரைைக் கேட்டாலே கொந்தளிக்கும்படியான புரட்சியாளராக இருக்கிறார் என்பதற்கு எனக்குக் கிடைத்த பதில் இது தான்.
Continue Reading...

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com