OLD PATH WHITE CLOUDS

OLD PATH WHITE CLOUDS

27 Jan 20
Article


ரிஷிகா, OLD PATH WHITE CLOUDS வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். புத்தர் தொடர்பான பல நூல்களை அவர் வாசித்திருக்கும் நிலையில், இந்த நூலை அவருக்குப் பரிந்துரைத்தேன். பதினொரு வயது ரிஷிகாவின் வாசிப்பு வேகம் அதிகமாகி, என்னால் அவருக்கு நூல்களைப் போதுமான அளவிற்கு வழங்க முடியாத நிலையில் இந்த நூலைக் கொடுத்தேன். 


கொஞ்சம் மெதுவாக வாசிப்பதற்கு இந்த நூல் ஏற்ற நூலாகும். ஒவ்வோர் அத்தியாயமும் நிறைய விடயங்களைச் சொல்வதால் ஒரு நாள் ஓர் அத்தியாயம் என்று வாசிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னதும், மகிழ்ச்சி அடைந்தேன், கொஞ்சம் ஓய்வானேன். இனி அவர் இந்த நூலை வாசித்து முடிக்கும் வரை வேறு நூல் அவசியமில்லை என்று நினைத்தேன். ஆனால், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாசித்து ஒரு நாளுக்கு மூன்று அத்தியாயம் வீதம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் பிடித்த வரிகளையெல்லாம் எழுதிவைத்த படியே வாசிக்கிறாராம்.


இதை முடிக்கட்டும். Buddha & His Dhamma கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதைக்கேட்ட ஒரு நண்பர், Buddha & His Dhamma வாசிப்பது கடினமாக இருக்கும். சில விடயங்கள் புரியும், பல விடயங்கள் புரியாது என்றார். எப்பொழுதுமே நாம் ஒரு நூலை எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நாம் புரிந்துகொள்வது வேறு என்று தான் நம்புகிறேன். OLD PATH WHITE CLOUDS வாசிக்க இனிமையாக இருப்பது போலவே, Buddha & His Dhamma வாசிக்கும் அனுபவம் உண்மையானதாக இருக்கும் என்று நம்புகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தரை நெருங்கும் அனுபவத்தை ஏதோ ஒரு நூலில் நாம் அடைந்து விடமுடியும். ரிஷிகா, OLD PATH WHITE CLOUDS வாசிக்கும்போது அதிகம் பயன்படுத்தும் வார்த்தை, Mindfulness. ஒரு நூலில் நாம் அதிகபட்சம் கற்றுக்கொள்வது ஒரு வார்த்தையாகத் தான் இருக்கமுடியும். 

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi