புலியும் புலி போலாகிய புலியும்

புலியும் புலி போலாகிய புலியும்

02 Jan 20
Article


“புலியும் புலி போலாகிய புலியும்”, கவிதைத்தொகுப்பு தயாராகிவிட்டது. இந்த ஆண்டில் என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் கவிதைத் தொகுப்பு, 'மீண்டும் கண்டெடுக்கப்படும்'. இதுவும் புத்தகக்காட்சியின்போது கிடைக்கும். “புலியும் புலி போலாகிய புலியும்” - பரிசோதனை முறையிலும் வடிவிலும் இப்படியான தொகுப்பைக் கொண்டுவரவேண்டுமென்று நெடுநாளாக எண்ணியிருந்தேன். இந்த முறை சாத்தியமாகிறது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அச்சடிக்கும் எண்ணமும் இருக்கிறது. நூல் வெளிவந்ததும் அறிவிக்கிறேன். ஏனோ அக்கவிதைகளை முகநூலில் வெளியிடவோ, பரவலாக விளம்பரம் செய்து வெளியிடும் விருப்பமோ ஏற்படவில்லை. புத்தகக் காட்சிக்கு ஏதாவது ஒரு புத்தகநிலையத்தில் மட்டும் விற்பனைக்கு வைக்கும் எண்ணம் இருக்கிறது. அகமுகம், மூவாமருந்து தொகுப்புகளைப் போலவே 'காஞ்சனை நூலாறு', வெளியீடாக வரும். தீவிரமாகக் கவிதை வாசிப்பவர்களுக்கு மட்டும் கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

ஓவியம்: குஷால் குமார்

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi