கவிஞர் தேவதேவனின் காதல் நினைவு

கவிஞர் தேவதேவனின் காதல் நினைவு

29 Oct 19
Article


கவிஞர் தேவதேவனின் அமுதநதி கவிதைத் தொகுப்பு கையில் சிக்கியது.  அவருடைய 37 - வது தொகுப்பு.  போக, வர அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கவிதைகளை வாசித்துக் கொண்டே இருந்தேன். சிறிய தொகுப்பு தான். என்றாலும் நெடுநாட்களாக வாசித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. தென்பட்டது, ‘காதல் நினைவு’, என்ற கவிதை.

காதல் நினைவு

தாகம் கொண்டு 

தண்ணீர் பருக வந்த போதுதான்

அதுவும் தண்ணீருக்குள்ளே தான்

ஆம்பல் மலரைப் பார்த்தது மான்

இதே போன்ற காட்சியை ஒட்டி  பழையதொரு தொகுப்பில் வாசித்த ‘அறுவடை’ கவிதை நினைவிற்கு வந்தது. ஆனால், முற்றிலும் வேறு அர்த்தம் பொதிந்த ஒன்றாக.

நீரில் தெரியும் நெற்கதிர்கள்

சொர்க்கத்தின் விளைச்சல்கள்

நாம் அதனை

நேரடியாய் அறுக்கமுடியாது.

புகைப்படம்: ஆர்ஆர் சீனிவாசன்

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi